Published on 08/08/2019 | Edited on 08/08/2019
மழைநீர் சேகரிப்பு குறித்து சமீபத்தில் அமைச்சர் வேலுமணி வெளியிட்ட வீடியோ அதிமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமி மழைநீர் சேகரிப்பு குறித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், மழை நீரை சேகரித்து தமிழ்நாடு வளமான பூமியாக வைத்திருக்க பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் திருக்குறள் மற்றும் இளங்கோவடிள் எழுதிய பாடல்களையும் அந்த வீடியோவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.