மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. காலை 10 மணியளவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணைக்கு வந்து மதகுக்கான பொத்தானை அழுத்தி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,
காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா. காவிரி பிரச்சனையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளது. வருண பகவான் அருளாள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் காவிரி உரிமையை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட ஜெயலலிதா காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசித்தார் என்றார். ஜெயலலிதா குறித்து மிகவும் உருக்கமாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவரது குரல் தழுதழுத்தது. கண்கள் கலங்கி கண்ணீர் விட்டார்.