தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துப் பேசினார்கள்.
இன்றைய சட்டப்பேரவையின கூட்டத்தில், தமிழக எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இதேபோல் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அரசு ஊழியரகள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என கூறினார்.
கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.