இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது.அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அந்த கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் யாரும் எந்த ஊடகத்துக்கும் கருத்து தெரிவிக்க கூடாது என்று அதிமுக தலைமை கூறியுள்ளது.இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக தலைமையகத்துக்கு முன்பு இருக்கும் சுவர்களில் எங்கள் பொது செயலாளரே என்று எடப்பாடியை முன்னிறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
மேலும் அதிமுகவின் பொதுச் செயலாளராக அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டரால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் அணி என்று இருந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்த போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அதோடு மட்டுமல்லாமல் தற்போதைய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் புகைப்படங்களும் இருந்தன.இவற்றோடு செங்கோட்டையனின் புகைப்படமும் போஸ்டரில் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது.இது பற்றி விசாரித்த போது ஓபிஎஸ்,இபிஎஸ் இவர்களை விட செங்கோட்டையன் தான் கட்சியின் சீனியர் அவருக்கு தான் தலைமை பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்த சம்பவத்தால் எடப்பாடிக்கு மேலும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.