அதிமுக கூட்டணியில் பாமகவும் , திமுக கூட்டணியில் விசிகவும் உள்ளது . ஏற்கனவே பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார் . முன்னாடி இருந்தே இவ்விருக் கட்சிகளுக்கு இடையே மோதல் உள்ளது . இந்த நிலையில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து அமைச்சர் சண்முகம் பிரச்சாரம் செய்தார் இதனை முன்கூட்டியே அறிந்த பொதுமக்கள் எங்கள் பகுதியில் பாமக கொடியுடன் யாரும் வரக்கூடாது. வேட்பாளர் நடந்து சென்றுதான் வாக்கு சேகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, வேட்பாளரின் பிரசார வாகனம் உள்ளே வராத வகையில் சாலையில் வண்டிகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் டிஎஸ்பி திருமால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே அதனையும் மீறி பிரசாரம் வாகனம் சென்றது. உடனே, பெண்கள் சரமாரியாக திட்டிக்கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் பிரசார வாகனம் மீது கல்வீசத் தொடங்கினர். இதையடுத்து உடனடியாக பாதியிலேயே பிரசாரத்தை முடித்துவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அதிமுக-பாமகவினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது,இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் பிரச்சாரத்தின் போது அவரது வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது அதில் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் , இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர் என்றும் தகவல் கூறப்பட்டது . தொடர்ந்து பாமக விசிக இரண்டு கட்சியிடையே மோதல் போக்கு முற்றி வருகிறது .