"சசிகலா, ஜனவரிக்கு முன்பே ரிலீசாவார்ன்னு மன்னார்குடி தரப்பு அடிச்சி சொல்கிறார்களே?'' என தகவல் வந்ததும், அது பற்றி விசாரித்தபோது, "சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கட்ட, அவங்க தரப்பு ரெடியா இருக்குதாம். டெல்லியில் சில டீலிங் நடந்துக்கிட்டிருக்கு. ஜனவரிக்கு முன்பே என்னை ரிலீஸ் பண்ணனும்னு சசிகலா கோரிக்கை வைத்துக் காத்திருக்காராம். டெல்லி சிக்னல் கொடுத்ததும், அபராதத் தொகையைக் கட்டிட்டு, சசி டீம் வெளியே வந்துடும்ன்னு அவங்க தரப்பு நம்பிக்கையாச் சொல்லுது.''
"ஜெ. அப்பல்லோவில் அட்மிட்டான நேரத்தில், அவர் டாக்டர்களிடம் பேசுறப்ப, சினிமா தியேட்டர் முன் சீட்டில் உட்கார்ந்துக்கிட்டு விசிலடிக்கிற மாதிரி என் மூச்சு சத்தம் எனக்கே கேக்குதுன்னு சொன்னாராம். அதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த டீம் அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை கொடுத்தப்ப, தினசரி அவர் கால்களைத் தூக்கும் உயரத்தை அளந்து குறித்துக் கொண்டதாம். அவர் இருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த டி.வி.யில் ஜெய் ஹனுமான் சீரியலைப் பார்க்கும் ஜெ. அந்த நேரத்தில் கட்சி பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் பிறர் பற்றியும் கருத்து பரிமாறிய வீடியோக்காட்சிகளும் இருக்கிறதாம். இப்படி ஒரு டஜன் வீடியோக்களை சசிகலா ரெடியா வச்சிருக்காராம். இதையெல்லாம் வருகிற தேர்தல் களத்தில் பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கிறாரார்'' என தெரிவித்தனர்.