
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் கூட்டு ரோட்டில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய தி.மு.க. (கிழக்கு) ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாநில தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், பலராமன், பார்த்தசாரதி மற்றும் போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.