



அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63. கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. ஓ.பி.எஸ். - விஜயலட்சுமி தம்பதிக்கு ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இவரது உடலுக்கு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அதிமுக நிர்வாகிகளும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினர். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினர்.