கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது தமிழக அரசு. வைரஸ் பரவுதலை தடுக்கவும், பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் முதல் கட்டமாக 500 கோடியை ஒதுக்கியிருந்த நிலையில், கொரோனாவால் உருவாகும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க 3,500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி.
இந்த நிலையில், கொரோனாவை எதிர்கொள்வதற்கு வசதியாக நிதி உதவியளிக்க வேண்டும் என அரசு தரப்பில் சமீபத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கொடுப்பார்கள் என ஏற்கனவே தெரிவித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி 25 லட்சம், பாமக எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் 3 கோடி ரூபாயும் இன்று நிதி உதவியளித்துள்ளனர்.