Skip to main content

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? நிராகரிக்கப்படும் ஓபிஎஸ் தரப்பு!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

தமிழக அமைச்சரவையில் மாற்றம் எப்பன்னு ஆளுந்தரப்பிலேயே எதிர்பார்ப்பில் கட்சி சீனியர்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஏற்றார் போல் ஃபாரின் டூருக்கு முன்னாடி அமைச்சரவை மாற்றத்தைச் செய்திடணும்ன்னு எடப்பாடி நினைக்கிறார். அமைச்சரவையில் ஏற்கனவே பதவி இழந்த பாலகிருஷ்ண ரெட்டி, பதவி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டனின் துறைகளை குறிவச்சிப் பலரும் லைன் கட்டி நிக்கிறாங்க. ஆனால் முதல்வர் எடப்பாடியோ, முதலில், குடும்பப் பாசத்துடன் பழகும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுருவை அமைச்சர் நாற்காலியில் உட்காரவைக்க ஆசைப்படறாராம். 
 

admk



அதே நேரத்தில் ஏற்கனவே போர்க்கொடி தூக்கிய தோப்பு வெங்கடாசலம் போன்றவங்களும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்குறாங்கனு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் பதவி வேணும்னு ஓபிஎஸ்ஸிற்கு நெருக்கடி கொடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் எடப்பாடி தரப்போ ஓபிஎஸ் தரப்பிற்கு கொடுக்க கூடாது என்ற முடிவில் இருப்பதாக சொல்கின்றனர். 

சார்ந்த செய்திகள்