தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, அ.தி.மு.க. ஊழல் பற்றிய விசாரணையில் களமிறங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி விசாரித்தபோது, தூத்துக்குடி தொகுதியிலேயே தங்கியிருந்து உதவிவரும் கனிமொழியை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் தொடர்புகொண்டு, கரோனா தொற்றைத் தடுக்கும் கவச உடைகள் நூறு எங்களுக்குத் தேவை என்று வேண்டுகோள் வைத்துள்ளார்கள். உடனடியாக சென்னை, கோவைப் பகுதிகளில் விசாரித்து, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்குமான 174 செட் கவச உடைகளை வாங்கி, சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் கனிமொழி. இதையெல்லாம் அரசுத்தரப்பில் உங்களுக்குத் தரவில்லையா என்று விசாரித்துள்ளார்.
மேலும் சுகாதாரத் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட கவச உடைகள் தரமானதாக இல்லை என்று அவர்கள் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த கனிமொழி, சுகாதார துறையில், குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மார்ச் முதல் வாரத்திலிருந்து தமிழக சுகாதாரத்துறைக்கு கொள்முதல் செய்த மருத்துவ உபகரணங்கள் பற்றியும், அதன் தரம் பற்றியும், டீலிங்குகள் பற்றியும் தோண்டித் துருவிக்கொண்டு இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.