இதுமிகப்பெரிய வரலாற்று தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலின் அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக வரக்கூடிய நிலை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடிய தகுதியும் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. அந்த அளவுக்கு அவருக்கு அரசியல் வேகம் இருக்கிறது என்று தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.


இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவருமான எச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், ''நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை?'' என குறிப்பிட்டுள்ளார்.