நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 'கண்டிப்பாக வர இருக்கும் தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்வீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். பத்து ஆண்டுகளாக நரேந்திர மோடி இந்தியாவை ஆண்டார். குறிப்பாக 2021-க்கு முன்பு இங்கிருந்த அடிமை ஆட்சியை வைத்து தமிழகத்திற்கு ஒரு நல்ல காரியத்தையும் செய்யவிடாமல் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள்” என்றார். பிரச்சாரத்தின் போது அவரது மகளும் உடனிருந்தார்.
படங்கள் : எஸ்.பி.சுந்தர்