Published on 16/08/2019 | Edited on 16/08/2019
வைகோ விவகாரத்தில் தி.மு.க. தலைமை மேலே காங்கிரசுக்கு வருத்தம் இருப்பதாக தகவல் பரவியது. அதாவது காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை நாடாளுமன்றத்திலேயே விமர்சித்தார் வைகோ. அது பற்றி கூட்டணியின் தலைமை என்ற வகையில் தி.மு.க. ஏன் வைகோவிடம் விளக்கம் கேட்கலை என்பது காங்கிரஸ் தரப்பின் ஆதங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் டெல்லி சென்ற வைகோ, பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்தாரே தவிர சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் சந்திக்க முயற்சி செய்யவில்லை என்று கூறுகின்றனர்.
இதையும் சுட்டிக்காட்டும் காங்கிரஸ் பிரமுகர்கள், வைகோ மூலம், தங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸை தி.மு.க. கழற்றிவிடப் பார்க்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. தரப்போ, வைகோவின் அரசியல் தனிப்பட்டது. அவரின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் தி.மு.க எப்படி கேள்வி கேட்க முடியும்ன்னு பதில் கேள்வி எழுப்புது. ஆகையால் தற்போதைக்கு இந்த பிரச்சனையை கூட்டணி கட்சிகள் பெரிதாக எடுக்காமல் இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.