தேசம் காப்போம் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடைபெறுகிற பாராளுமன்ற தேர்தலில் இந்துத்துவா சக்திகளை தரைமட்டமாக்கிட சூளுரை கொண்டு இருப்பதாக தேசம் காப்போம் மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மலரப் போகிற அரசு மாநில கட்சிகளின் ஆட்சியை உறுதி செய்கிற, தேசிய இனங்களின் வலிமையை பறை சாற்றும் அரசாக திமுக தலைமையில் அமையும். சமூக நீதி நமது கனவு அந்த கனவு நனவாகி இருக்கிறது. ஆட்சி அதிகாரத்திற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வர வேண்டும் என்று பெரியார் சொன்னார். அதனை கலைஞர் கருணாநிதி நனவாக்கி நிறைவேற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரியார் சமத்துவபுரம் வழியாக வீடுகளை தந்தவர் கலைஞர். Mr. Modi you could never come back to seat. உங்கள் ஏஜெண்டுகளும் மீண்டும் பதவிக்கு வர முடியாது எனவும் சூளுரைத்தார். நம் சமூகத்தை ஆரியம் சீரழக்கிறது. அதை தீர்க்க வேண்டிய நேரம் இது. மோடி தமிழகத்தை வஞ்சித்தார். கஜா புயல் நிவாரண நிதி, காவிரி விவகாரத்தில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதித்து துரோகம் இழைத்தார். ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை கொண்டு வருகிறது, பெட்ரோலிய மண்டலங்களை உருவாக்குகிறது.
தமிழக அரசுக்கு சூடு, சொரணை, வெட்கம், முதுகெலும்பு இல்லாத அரசு. அணைப்பாதுகாப்பு சட்டம், நியூட்ரினோ திட்டத்தாலும் தமிழகம் பாதிப்பை சந்திக்கிறது. எங்கள் உரிமைகளை இழந்தால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அந்தந்த மாநிலத்துக்கு சொந்தம் என அறிவிக்கும் நிலை ஏற்படும். சமூகநீதிக்கு விரோதமான மத்திய அரசு. மாநில உரிமைகளை நசுக்குகிறது மத்திய அரசு வாக்குச் சீட்டுகளை தாருங்கள் இந்தியாவைக் காப்போம் என பேசினார்.