பா.ஜ.க.வின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் ப.சி.யை, தாமரைத் தரப்பு தீவிரமாக் குறிவைத்து வருவதாக சொல்கின்றனர். பா.ஜ.க. அரசு 20 லட்சம் கோடி ரூபாயை மக்கள் நலத்திட்டத்துக்கு அர்பணிக்கிறதாக சிறப்பு தொகுப்பை அறிவித்தது. ப.சி.யோ, இந்தக் கணக்கே பொய் என்று சொன்னதோட, மக்களுக்கு தற்போது அவசரத் தேவை, அவங்க கைக்கு நேரடியா பணம் போறதுதான், நேரடியாக பணம் அவங்க கைக்குப் போனால்தான் பொருளாதார இயக்கம் நார்மலுக்கு வரும் என்றும் ப.சி. சொன்னார். இதையே பொருளாதர வல்லுனர்கள் பலரும் கூறினார்கள். பொருளாதார ஆய்வுகளை நடத்தும் மூடிஸ் நிறுவனம் உட்பட பல அமைப்புகளும் மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சியை புள்ளிவிவரங்களோடு புட்டு வைக்கிறதால், ப.சி.யை மறுபடியும் குறி வைத்துள்ளது பா.ஜ.க. அரசு.''
மேலும் ப.சி.க்கு எதிரான ஐ.என்.எக்ஸ். வழக்கை துருவிவரும் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் ப.சி.தரப்பு பிரிட்டன், ஜெர்மனி, இந்தோனேசியா, ஸ்வீடன் உள்ளிட்ட 17 நாடுகளில் சொத்துகளை வாங்குக் குவிச்சிருப்பதை ஆதாரங்களோட கண்டுபிடித்து இருப்பதாக சொல்கின்றனர். இதை இப்போது குற்றப் பத்திரிகையிலும் இணைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இதை வைத்து விரைவில் ப.சி.க்கு எதிரான சூறாவளியை மறுபடியும் எழுப்ப பா.ஜ.க. தரப்பு ரெடியாகி வருவதாக சொல்கின்றனர். இதனால் காங்கிரஸ் தலைமை ஊரடங்கு நேரத்தில்கூட பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதால் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.