Published on 04/06/2019 | Edited on 04/06/2019
காங்கிரஸின் படு தோல்வியை ராகுலால் உடனடியா ஜீரணிக்க முடியலை. அதனால்தான் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்றதா கட்சியின் காரிய கமிட்டியில் அறிவிச்சி, அதில் உறுதி காட்டினாரு. அவரோட முடிவை மாத்திக்கணும்னு சொல்லி சென்னை, பெங்களூருன்னு பல நகரங்களிலும் காங்கிரசார் ஊர்வலம் விட்டாங்க. தீக்குளிக்க முயற்சித்தவர்களும் உண்டு. இதற்கிடையில், நாடாளுமன்றத் தில் பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரசோடு ஒத்துப் போகக்கூடிய கட்சிகளின் கூட்டத்தை 31-ந் தேதி அகமது படேல் தலைமையில் கூட்டு வதுன்னு 29-ந் தேதி முடிவானது.
தி.மு.க. தலைமைக்கு உடனடியா தெரிவிக்கப்பட்டது. அதோடு, மம்தாவின் திரிணாமுல் காங் கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ், 22 எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங் கிரஸ்னு எல்லாக் கட்சிகளையும் ஒன்று கூட்டறது பத்தி ஆலோசிக் கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர், காங் கிரஸை சேர்த்துக்கிட்டா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் அதை ஜீரணிச்சிக்கு மான்னு ராகுல் பல விதத்திலும் கணக்குப் போட்டார். அதுக்கு முன்னாடி, தங்கள் கட்சியைச் சேர்ந்த வெற்றி பெற்ற 52 எம்.பி.க்களையும் சந்திக்க ஆயத்தமானாருனு டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.