ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம், இந்திராணி முகர்ஜியோடு நெருக்கமாக இருந்தார் என்றும், விமானப் பணிப்பெண்கள் அவரை நினைத்த நேரத்தில் சந்திக்க முடிந்தது என்றெல்லாம் அதிரடியாக எழுப்பப்பட்ட பாலியல் புகாரைப் போல, ப.சிதம்பரத்திற்கு எதிராக இன்னொரு அதிர்ச்சி புகாரையும் சி.பி.ஐ. வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரோடு அவர் நல்ல நட்பில் இருந்தார் என்றும், மேலும் அவர்களுக்கு பண உதவிகள் செய்தார் என்று பகீர் குற்றச்சாட்டுகளை வைப்பதோடு, அதற்கு ஆதாரமான படங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் வசம் வைத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து 5-ந் தேதிவரை கைது செய்யக் கூடாது என்று ப.சிதம்பரம் தரப்பு தடை வாங்கிய நிலையில் இன்று முன்ஜாமீன் மீண்டும் மறுக்கப்பட்டது. மேலும் அமித்ஷாவை சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 3 மாத காலம் சிறையில் அடைத்ததுபோல், ப.சிதம்பரத்தையும் அடைத்து வைக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் அமலாக்கப் பிரிவினர் வெளிநாடுகளில் ப.சிதம்பரம் தரப்பு யாரோட பெயரில் சொத்துக்களை வாங்கியிருக்கிறது என்ற ஆவணங்களை எல்லாம் சேகரித்து வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.