பா.ஜ.க இருக்கும் வரை தமிழகத்தில் ஸ்டாலினை ஆட்சியில் உட்காரவிடமாட்டோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் ஓப்பனாக பேசி வருவதை திமுக தரப்பு கவனித்து வருகிறது. மதுரையில் ஓய்வில் இருக்கும் மு.க.அழகிரியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகத்தும், முக்கிய துறைகளை வைத்திருக்கும் மத்திய அமைச்சர்கள் சிலரும் அடிக்கடி தொடர்புகொண்டு பேசுவதாக சொல்லப்படுகிறது. உங்களை எங்க கட்சியில் சேருங்கள் என்று நாங்கள் நிர்பந்திக்கவில்லை.

அதே சமயம் "கலைஞர் தி.மு.க.'ன்னு ஒரு கட்சியைத் தொடங்குங்கள். அதன் மூலம் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருக்கும் தி.மு.க.வினரை ஓரணியில் திரட்டுங்கள். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்க செய்யத் தயாராக இருக்கிறோம் என்று பலவிதத்திலும் வலியுறுத்திக் கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அழகிரி தரப்போ இது பற்றி எந்த பதிலையும் அவர்களுக்குச் சொல்லவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.