Skip to main content

பிரியங்கா ரெட்டி வழக்கின் என்கவுண்டர் குறித்து பாஜகவின் எச்.ராஜா அதிரடி கருத்து! 

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

கடந்த 27- ஆம் தேதி ஐதராபாத்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   
 

bjp

 


இதுகுறித்து தெரிவித்துள்ள ஹைதராபாத் காவல்துறையினர், "பெண் மருத்துவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை நடித்துக்காட்ட குற்றவாளிகள் நான்கு பேரையும் சிறப்புப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு கூட்டி சென்றுள்ளனர். அப்போது 4 பேரும் ஒரு போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளனர். இதனை அடுத்து போலீசார் அவர்களை சரணடையுமாறு கூறினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்ததும் வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லை. உனாவ் படுகொலை கற்பழிப்பு குற்றவாளிகள் பைலில் வெளிவந்த 5 நாட்களுக்குள் தாங்கள் கற்பழித்த பெண்ணைப் படுகொலை செய்கின்றனர். இந்த மிருகங்களுக்கு ஹைதராபாத் முறைதான் சரியான தீர்வு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்