அந்த சரக்கு மிடுக்கு பேச்சு ஆவேசங்கள் எங்கே காணும். பதவி சுகத்துக்காக டி.ஆர் பாலு, தயாநிதிமாறன் காலடியில் நசுங்கிப் போச்சா. இனி உங்கள் கோஷம் அடங்கிப் போ, அத்துமீறாதே. திமிராதே, திருப்பி அடிக்காதே. அவ்வளவுதான். https://t.co/njtC7cvCkh
— H Raja (@HRajaBJP) May 14, 2020
திமுகவின் சார்பில் கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து வந்துள்ள ஒரு லட்சம் கோரிக்கைகளை தமிழக அரசிடம் நேரில் முன் வைப்பதற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு தலைமைச் செயலாளரைச் சந்தித்து மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைக் கொடுக்க சென்றனர். அப்போது உங்களைப் போன்ற ஆட்களிடம் இதுதான் பிரச்சனை என்று தலைமைச் செயலாளர் கூறியதாக திமுகவினர் கூறினர்.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் பேசியது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நடந்துகொண்ட அணுகுமுறை வேதனை அளிக்கிறது. அவரது போக்கு கண்டத்துக்குரியது. அவரின் விளக்கம் ஏற்புடையதில்லை என்று கூறியிருந்தார். இதனையடுத்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தொல்.திருமாவளவன் பேசியது குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில், அந்த சரக்கு மிடுக்கு பேச்சு ஆவேசங்கள் எங்கே காணும். பதவி சுகத்துக்காக டி.ஆர் பாலு, தயாநிதிமாறன் காலடியில் நசுங்கிப் போச்சா. இனி உங்கள் கோஷம் அடங்கிப் போ, அத்துமீறாதே. திமிராதே, திருப்பி அடிக்காதே. அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.