Skip to main content

ரஜினி வழக்கு வாபஸ் பற்றி திமுக, திராவிட கழகத்தினரை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார்.  அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார்.  அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது.  அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார். இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது ரஜினிகாந்த் அவுட்லுக் என்ற பத்திரிகையின் ஆதாரங்களை காண்பித்து தான் கூறியது சரிதான் என்றும் கூறினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.


இதனையடுத்து பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை ரஜினிகாந்த் பரப்பி வருவதாக, அவர் மீது சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்வதற்கு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், மனு தள்ளுபடியானது.   

 

 

bjp


 


மேலும் ஒரு வாரத்திற்கு பிறகு புகார்கள் மீது காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று திராவிட கழகத்தினர் தெரிவித்தனர். இதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல கதை இதுதான் என்றும், கத்தி, கழி போன்ற ஆயுதங்களுடன் சேலத்தில் ஈ.வெ.ரா ஆபாச ஊர்வலம் நடத்தியதும் அது தொடர்பாக கருணாநிதியின் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் கண்கூடு. திக போன்ற வன்முறை இயக்கங்களும் அவர்களின் அரசியல் கரமாகத் திகழும் திமுக வும் அரசியல் தளத்திலிருந்து அப்புறப் படும் என்றும் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்