Skip to main content

ஜேஎன்யு மாணவர் தாக்குதல் மற்றும் போராட்டம் குறித்து பாஜகவின் எச்.ராஜா சர்ச்சை கருத்து! 

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

bjp

இந்த நிலையில் ஜேஎன்யு மாணவரை மர்ம நபர்கள் தாக்கியது குறித்து பாஜகவின் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இடதுசாரிகள் ஜே.என்.யூ வில் நடத்திய முகமூடி நாடகத்தை நம்பி தமிழக மாணவர்கள் யாரும் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 1964-67 காலகட்டத்தில் திக& திமுக இந்தி எதிர்ப்பு நாடகத்தை மாணவனாக பார்த்தவன் நான். இன்று அவர்கள் சி.பி.எஸ்.இ.பள்ளி முதலாளிகள் என்று கூறியுள்ளார். அதே போல் சமூக வலைத்தளத்தில் இடதுசாரிகள் தான்னு எப்பிடி உறுதியா சொல்றிங்க சார்..? என்று கேள்விக்கு, உண்மை குற்றவாளிகள் அறியப்பட்டு கைது செய்யப்படுவர். அப்போது அனைத்தும் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  
 

சார்ந்த செய்திகள்