நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இருந்தாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவின் வளர்ச்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பாஜக தலைமை தமிழகத்தில் பாஜகவை வளர்க்க ஒரு சில உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து உத்தரவு போட்டது. இதனையடுத்து தமிழக பாஜக நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தமிழக பாஜக தலைவரின் பதவி காலம் முடியும் நிலையில் இருப்பதால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் யாரை பாஜக தலைவர் பதவிக்கு வர வைத்தால் பாஜக வளரும் என்று தமிழகம் வந்த அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளிடம் நீங்களே மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு லிஸ்ட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் என்று தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவு போட்டதாக கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகள் ஒரு லிஸ்டை ரெடி செய்துள்ளார்கள். அதில் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பெயரை பரிசீலித்து அனுப்பியதாக கூறுகின்றனர். மேலும் இவர்களை தேர்ந்தெடுத்த காரணத்தையும் அதில் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதில் முக்கியமாக அவர்களது சாதியை மையமாக வைத்து தேர்ந்தெடுத்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதை கேட்ட அமித்ஷா தமிழக நிர்வாகிகளிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அதிமுகவில் கொங்கு மண்டலம் மற்றும் தென் தமிழகம் என்று இரு பிரிவாக அரசியல் அதிமுகவில் நடந்து வருவதால் உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அதே நிலைமை பாஜகவிற்கு ஏற்பட வேண்டுமா என்று கேவி எழுப்பியதாகவும் கூறிவருகின்றனர். இதில் இருந்து தமிழக பாஜக தலைவர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.