தேனி, ஆண்டிபட்டி அருகேயுள்ள எஸ்.எஸ். புரத்தில் நாளை(ஏப்.13) தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இதற்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து இன்று(ஏப்ரல்12) தேனி, அன்னஞ்சி பிரிவு அருகே பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பிரச்சாரத்திற்கும் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பிரதமரின் பாதுகாப்பு ஒத்திகை ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது ஒரு ராணுவ ஹெலிகாப்டர் பிரதமர் மோடியின் கூட்டம் நடக்கும் இடத்தில் தரையிறக்கி ஒத்திகை பார்க்க முடிவு செய்தனர். ஆனால் அந்த ராணுவ ஹெலிகாப்டர் ராகுல்காந்தியின் கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று தரையிறங்கியது. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின் பைலட் ஹெலிகாப்டரை எடுத்துக்கொண்டு மோடி பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு சென்றார்.