சட்டப்பேரவையில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் பேசினார். அப்போது ஜெ.அன்பழகன் பேசியது குறித்து கண்டனம் தெரிவித்த சபாநாயகர் இந்த அவைத் தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். திமுக எம்.எல்.ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக 14ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நடிகரும், அரசியல்வாதியமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து தெரிவித்துள்ளார். அதில், ஏன் 14 ம் தேதி. ஜனவரி முதல் தேதி முதல் டிசம்பர் 31 வரை லீவு கேளுங்க. சம்பளம் வீடு தேடி வரும். ஆனா பசங்க உருப்படுவாங்க. என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பாமக நிறுவனர் ராமதாசும் போகிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது. பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து கடந்த 3 நாட்களில் 4 லட்சத்து 13 ஆயிரம் பேர் வெளியூர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.