Skip to main content

அதிரடி திட்டத்துடன் தருமபுரியில் களமிறங்கிய அன்புமணி!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. பின்பு பாமக கட்சி சார்பாக அன்புமணி ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் தோற்றாலும் தருமபுரி மக்களுக்காக உழைப்பேன் என்று தேர்தல் முடிவுக்கு பிறகு கூறியிருந்தார். தருமபுரி தொகுதியில் 2014-2019ஆண்டு வரை எம்.பி.யாக இருந்த போது தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 

 

pmk



அதன் அடிப்படையில் அப்போது ரயில்வே அமைச்சர்களாக இருந்த சதானந்தகவுடா, சுரேஷ் பிரபு, பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய பாஜக அரசு கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி அடங்கிய ரயில்வே மண்டலத்தில் தருமபுரி, மொரப்பூர் திட்டத்தை அறிவித்தனர். பின்பு நீண்ட நாட்களாக அந்த திட்டம் செயல்படாமல் கிடப்பில் போட்டனர். இதனையடுத்து தருமபுரி-மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டருக்கு ரூபாய் 350 கோடி மதிப்பில் தொடர்வண்டி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 4 ஆம் தேதி தருமபுரி வள்ளுவர் மைதானத்தில் நடந்தது. 


இந்த திட்டத்தை தற்போது ரயில்வே அமைச்சரான  பியூஸ் கோயல் அடிக்கல் நாட்டினர். இந்த திட்டத்திற்காக மத்திய அமைச்சர்களை 18 முறை அன்புமணி சந்தித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலையில் மொரப்பூர்-தருமபுரி இரயில்வே இணைப்புத்திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அன்புமணி, விரைவில் இந்த திட்டத்தை முடிக்க ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தருமபுரி தொகுதியில் தோல்வி அடைந்தாலும் இந்த திட்டத்தை முடிக்க அன்புமணி தீவிர முயற்சி எடுத்து வருவதை அந்த தொகுதி மக்கள் வரவேற்று வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்