தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விருப்பமனு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.
இந்நிலையில் 15 பேர் கொண்ட முதற்கட்ட தேர்தல் வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் போட்டியிடுகிறார். ராசிபுரம் - அன்பழகன்; பாபநாசம் - எஸ்.ரங்கசாமி; சைதாப்பேட்டை - செந்தமிழன்; சோளிங்கர் - என்.ஜி.பார்த்தீபன்; வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்; அரூர் - ஆர்.ஆர்.முருகன்; பொள்ளாச்சி - கே.சுகுமார்; தருமபுரி - டி.கே.ராஜேந்திரன்; புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்; கோவை தெற்கு - துரைசாமி; உசிலம்பட்டி - ஐ.மகேந்திரன்; ஸ்ரீரங்கம் - ஆர்.மனோகரன்; மடத்துக்குளம் - சி.சண்முகவேலு; திருப்பத்தூர் (சிவகங்கை) - கே.கே.உமாதேவன் என பட்டியல் வெளியாகியுள்ளது.