Skip to main content

"பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்"  -  மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு 

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

"Those who work in the press and media will be considered as frontline employees." - MK Stalin

 

முதல்வர் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (04.05.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன. 

 

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்