தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. வருகிற மே 19ஆம் தேதி சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 22 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவும், நாடாளுமன்ற தேர்தல் முடிவும் மே 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எந்த கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ அந்த கட்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் எதிர்பார்ப்புடன் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொது மக்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் அணைத்து கட்சியும் வேட்பாளர்களை மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுத்து உள்ளனர், குறிப்பாக வேட்பாளர்களின் பண பலம், தொகுதி செல்வாக்கு,மக்கள் பலம் என அணைத்தும் பார்த்து சீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதனால் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள 22 அமமுக வேட்பாளர்களில் 19 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிமுக, திமுகவை விட அமமுகவில் தான் அதிகம் பேர் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர் என்ற செய்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக, அமமுக என எல்லாமே பணபலம் இருக்கிற காட்சிகளாக பார்க்கப்படுகிறது . அணைத்து கட்சி சார்பிலும் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும் பணக்காரர்கள் தான் இருந்தனர். இதில் திமுக, அதிமுக ஆகிய காட்சிகளை விட அதிக அளவில் கோடீஸ்வரர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது அமமுக கட்சி தானாம். அதாவது 22 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களில் 19 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்ற தகவல் வந்துள்ளது. 2வது இடத்தில் திமுகவும்,மூன்றாவது இடத்தில் அதிமுகவும் உள்ளது.மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பாக நிறுத்தப்பட வேட்பாளர்களில் பெரும்பாலோனோர் பணக்கார வேட்பாளர்கள் என்ற தகவலும் வந்துள்ளது.
இதில் டாப் 10 கோடீஸ்வர வேட்பாளர்களில் 4 பேர் திமுக, 3 அதிமுக, 3 அமமுக ஆகும். அவர்கள் விவரம்: சூலூரில் திமுகவின் பொங்கலூர் பழனிச்சாமி ( சொத்து ரூ. 44.66 கோடி). ஓசூரில் அதிமுகவின் ஜெயந்தி (ரூ. 26.43 கோடி), சூலூர் அமமுக வேட்பாளர் கே. சுகுமார் (ரூ. 19.45 கோடி), திருவாரூர் அமமுக எஸ். காமராஜ் (ரூ. 18.39 கோடி), ஆண்டிப்பட்டி திமுக ஏ மகாராஜன் (ரூ. 15.24 கோடி), ஆண்டிப்பட்டி அமமுக ஏ லோகிராஜன் (ரூ. 13.17 கோடி), பூந்தமல்லி திமுக ஏ கிருஷ்ணசாமி (ரூ. 12.34 கோடி), திருப்பரங்குன்றம் டாக்டர் பி. சரவணன் திமுக ( ரூ. 12.11 கோடி), சாத்தூர் அதிமுக ராஜ வர்மன் (ரூ. 7.95 கோடி), அரவக்குறிச்சி அமமுக ஷாகுல் ஹமீது (ரூ. 6.07 கோடி).இதனை தேர்தல் சீர்திருத்த இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.