Skip to main content

அமித்ஷாவின் தமிழக அரசியல் திட்டம்!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

மேற்குவங்கத்தில் பி.ஜே.பி. ஸ்ட்ராங்கான மாதிரி, இங்கேயும் ஸ்ட்ராங்காவதற்கு ஏதாவது ஸ்பெஷல் திட்டம் அமித்ஷாவைத்திருக்கிறாரா என்ற கேள்வி அனைத்து அரசியல் தலைவர்கள் மத்தியிலும் உள்ளது.இது பற்றி விசாரித்த போது  ஸ்பெஷல் திட்டத்தின் ரெண்டு பாயிண்டுகளை மட்டும் சொல்றேன், கேட்டுக்கங்க. பாயிண்ட் நம்பர் 1. கட்சி ஆரம்பிக்கப் போறேன், கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்கிற ரஜினியை, பி.ஜே.பி.க் குள் கொண்டு வந்து அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது. 

 

amithsha



பாயிண்ட் நம்பர் 2. ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்கலைன்னா, அவரை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து, அந்தக் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்து 2021-ல் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது. இதற்காக ரஜினியின் குடும்ப உறவுகள் மூலம் வெயிட்டாக பேசி வருகிறது பா.ஜ.க. தலைமை. மோடி-அமித்ஷா-நிதின்கட்கரி இந்த மூவருமே ரஜினியை கன்வின்ஸ் பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்காங்க. ரஜினி என்ன சொல்வாரு, எப்படிச் சொல்வாரு, எப்ப சொல்லுவாருன்னு யாருக்குத் தெரியும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்