Published on 08/07/2019 | Edited on 08/07/2019
நாடு முழுக்க தன் பலத்தை அதிகரிச்சிக்க நினைக்கும் பா.ஜ.க. தலைமை, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஜரூரா இறங்கியிருக்கு. இதற்கான நிகழ்ச்சியை 6-ந் தேதி தன் வாரணாசி தொகுதியிலிருந்து மோடி துவக்கி வைக்கிறார். அதே நாள்ல தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அமித்ஷா வும், தமிழகத்தில் பா.ஜ.கவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டாவும் இந்த உறுப்பினர் சேர்க்கையைத் துவக்கி வைக்கிறாங்க.
இதுக்காகத் தமிழகம் வரும் நட்டா, இங்குள்ள பா.ஜ.க. தலைவர்களுடன் தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றி விவாதிக்கத் திட்டமிட்டிருக்காராம். அவர் வரும் போது, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஒருசில பிரமுகர்களையாவது பா.ஜ.க.வில் சேர்க்கப் பாருங்கன்னு இங்குள்ள கட்சிப் புள்ளிகளுக்கு அசைன் மெண்ட் கொடுக்கப் பட்டிருக்கு. அதனால் வேறு கட்சியிலிருந்து எப்படியாவது ஒரு பிரமுகரை இழுக்கனும்னு தமிழக பாஜகவினர் திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.