Skip to main content

அதிமுக பொதுக்குழு வழக்கு; இரு தரப்பிற்கும் நீதிபதிகள் சரமாரி கேள்வி

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

AIADMK General Committee Case; Judges barrage of questions for both sides

 

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

 

இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

 

இதற்கு ஓபிஎஸ் தரப்போ, அந்தப் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் நேரடியாக ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது. அதேபோல், “இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஈபிஎஸ் தரப்பு கூறியது.

 

இதற்கு மறுப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு, “ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு சட்டவிரோதமானது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லுபடியாகாதவை” எனக் கூறியது.

 

இதற்குப் பதிலளித்த ஈபிஎஸ் தரப்போ, “கட்சியின் விதியின்படி 5ல் 1 பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையிலேதான் பொதுக்குழு கூட்டப்பட்டது. மேலும், பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை” எனக் கூறினர்.

 

இந்த வாதத்தின்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, “பொதுக்குழுவிற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தீர்மானங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” எனக் கூறினர். வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்