கரோனா வைரஸ் பிரச்சனையிலும் அ.தி.மு.க.வில் கோஷ்டி அரசியல் அதிகமாக இருக்கிறது என்கின்றனர் அதிமுகவினர். இது பற்றி விசாரித்தபோது, ராஜேந்திர பாலாஜியின் மா.செ.பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவரோட விருதுநகர் மா.செ. பதவிக்காக, அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜனும், மாஜி மந்திரி வைகைச் செல்வனும் முட்டிமோதிக்கிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மயிலாடுதுறையின் மா.செ. பதவியை தன் ஆதரவாளருக்குத் தர வேண்டும் என்று மாவட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராதா கிருஷ்ணனும், பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சீர்காழி எம்.எல்.ஏ.பாரதியும் மா.செ. பதவிக்கு போட்டி போடுவதாக கூறுகின்றனர். சீனியர் என்கிற முறையிலும், இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்ற முறையிலும் தனக்கு மா.செ.பதவி வேண்டும் என்று பவுன்ராஜ் மல்லுக்கட்டுகிறார். மயிலாடுதுறையில் பவுனை ஆதிக்கம் செலுத்த விட்றக்கூடாது என்று எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் தரப்பு போராடிக்கிட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.