சட்ட விரோதமாக கோவை மாவட்டத்தில் நிறைய செங்கல் சூளைகள் செயல்படுகிறது. கோவையின் வடக்குப் பகுதியில் இயங்கிவரும் இப்படிப்பட்ட சூளைகள், அங்கு இருக்கும் பகுதிகளில் விருப்பத்துக்கும் மண்ணைத் தோண்டி எடுக்கின்றன. இவற்றைக் கண்காணிக்கும் கோவை வடக்கு தாசில்தார் மகேஷ், அப்படிப்பட்ட பள்ளத்தை எல்லாம் கர்ம சிரத்தையாக மூடிவிடுவதாக சொல்கின்றனர். தோண்டினாலும் மூடினாலும் இவருக்கு லாபம் என்கின்றனர். இதற்கெல்லாம் கோவை மாவட்ட மந்திரியான உள்ளாட்சித்துறை வேலுமணி ஆசி வழங்கிக்கிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் வேலுமணி எடப்பாடிகிட்ட மிகவும் செல்வாக்காக இருப்பதால் கட்சியினர் வேலுமணிக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதாக சொல்லப்படுகிறது. வேலுமணியோட உள்ளாட்சித் துறை சார்பிலான மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவாக, இட்லி, தோசை, பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இதை தமிழகம் முழுவதுமான பள்ளிகளில் விரிவுபடுத்தினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எடப்பாடியுடன் விவாதித்திருக்கிறார் வேலுமணி. இதற்கு 900 கோடி ரூபாய் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு இருக்கிறது.