Published on 14/05/2020 | Edited on 14/05/2020
கரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில், அமைச்சர்களில் பெரும்பாலோனோர் தங்கள் சொந்தத் தொகுதியிலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, சசிகலா செப்டம்பர் மாதத்தில் வரப்போகிறார் என்று எதிர்பார்ப்பில் இருக்கும், அதிருப்தி அமைச்சர்கள், டிசம்பர் மாதத்தில் பொதுத் தேர்தல் வரலாம் என்று நம்புகிறார்கள்.
அதனால் தங்கள் சொந்தத் தொகுதி மக்களைத் தங்கள் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று, அவர்களுக்கு அரசின் நிவாரண உதவிகளில் தாராளம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் கோட்டைப் பகுதியே காலியாக இருப்பதாகச் சொல்கின்றனர். சென்னையில் அதிவேகமாகப் பரவும் கரோனா தொற்றால் சிலநாட்கள், சொந்தத் தொகுதியில் இருப்பது தான் பாதுகாப்பு என்று சில அமைச்சர்கள் கருதுவதாகச் சொல்லப்படுகிறது.