Skip to main content

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! (படங்கள்)

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

 

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அறிவித்தார்.

 

முன்னதாக அ.தி.மு.க. அலுவலகம் முன்பாக திரண்டிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவபடத்தை தங்கள் உடம்பில் வரைந்துகொண்டும் ஆங்காங்கே மேளம் பாடல் எனவும் உற்சாகமாக இருந்தனர். காலை 9.30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களின் ஆரவாரத்தோடு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துனர். அதன்பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 11 பேர் கொண்ட வழிக்காட்டு குழு உறுப்பினர்களை அறிவித்தார். அதன்பின் காலை 10 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்