கடந்த 21ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் தமிழரசுக் கட்சி சார்பில் இயக்குனர் கௌதமன் உட்பட 12 பேர் போட்டியிட்டனர்.
இதில் 84.41% சதவிகித வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் இன்னும் பணி விழுப்புரம் பைபாஸ் சாலை அருகே உள்ள எஸ் பொறியியல் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் பத்திரமாக கொண்டு வைக்கப்பட்டன இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இதில் முதல் சுற்றிலேயே அதிமுக அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னணியில் இருந்து வந்தார். இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மையத்தின் உள்ளே அதிமுக, திமுக வேட்பாளர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து வாக்கு எண்ணுவதை கவனித்து வந்தனர். இதைக்கண்டு அங்கிருந்த அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள் ஊடகத்தினர் வியப்புடன் பார்த்தனர்.
எப்படியும் நாம் ஜெயித்து விடுவோம் என்று திமுகவினர் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தனர். இதற்காக மாஸே பொன்முடி ஆதரவாளர்கள் விழுப்புரத்தில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஏகப்பட்ட திமுக கொடி தோரணங்கள் கட்டி கட்டியிருந்தனர். வெற்றி களிப்பை கொண்டாட பட்டாசுகள் இனிப்புகள் எல்லாம் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
ஆரம்பம் முதலே திமுக துறைமுகத்தை நோக்கி சென்ற படியே இருந்தது. அதிமுக வேட்பாளர் 40,000 வாக்குகளும் முன்னணியில் இருந்ததை கண்டதும் அறிவாலயத்தில் இருந்த திமுக கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவராக சோர்ந்த முகத்துடன் கலைந்து சென்றனர். அறிவாலயம் மதியம் ஒரு மணிக்கே வெறிச்சோடிப் போய் காணப்பட்டது.
அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சிவி சண்முகம் ஆதரவாளர்கள் அவரோடு உட்கார்ந்து வெற்றி சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டனர். தன்கட்சி தொண்டருடன் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் சந்தோஷ்ததில் கை குலுக்குகிறார். தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சிக்கடலில் மிதந்து வருகின்றனர். 20 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்1,13,407 வாக்குகளும் திமுக வேட்பாளர் புகழேந்தி 69,357 வாக்குகளும் பெற்றனர். அதிமுக வேட்பாளர் 44551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றி அறிவிப்பு வெளியானவுடன் அதிமுக கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் இருந்த மந்திரி சிவி சண்முகம் தொண்டர்களுடன் வெளியேவந்து பத்திரிகையாளர்களிடம் "இந்த இடைத் தேர்தல் வெற்றி மூலம் மக்கள் சரியான தீர்ப்பளித்துள்ளனர். இந்த வெற்றி வரும் 2021 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதற்கு முன்னோட்டமாக வெற்றியாக அமைந்துள்ளது. தோல்வியுற்ற திமுக வேட்பாளர் புகழேந்தி "இந்த இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்று வென்றுள்ளது" என்று ஆதங்கத்துடன் கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதி நிலவரம்: அதிமுக 1,13,407, தபால் வாக்கு 21, மொத்தம் 1,13,428 ;திமுக 68,632, தபால் வாக்கு 14, மொத்தம் 68,646 ; வாக்கு வித்தியாசம் 44,782 அதிமுக முன்னிலை பெற்றது.
ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இறுதி நிலவரம் அறிவிப்பதில் இழுபறி நிலவி வருகிறது. கோளாறான வாக்குப்பதிவு இயந்த்திரத்திற்கு பதிலாக அங்கு பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரம் மூலம் வாக்கு எண்ணிக்கையை சரிபார்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.