





Published on 18/01/2021 | Edited on 18/01/2021
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் (17.01.2021) தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்வுகளும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. சென்னை அசோக் பில்லர் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்வின்போது ரஜினி மக்கள் மன்றம், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.