ஏழு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடம் போராட்டம் நடந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம் என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், 7 தமிழர்களையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருக்கிறது.அதை காரணம் காட்டி தமிழக ஆளுநரும் உத்தரவிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
எனவே காலம் தாழ்த்தும் மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து இன்று (07/12/2020) தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.