Published on 06/05/2020 | Edited on 06/05/2020
If Liquor shops can be opened , why not temples and schools ? Oh Yes. Its all about revenue, not about what a decent society deserves. #COVIDIOTS
— Kasturi Shankar (@KasthuriShankar) May 6, 2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நாளை (07/05/2020) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மதுபானக் கடையை அரசு திறப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மதுபானக் கடைகளை திறக்க முடிந்தால், கோயில்களும், பள்ளிகளும் ஏன் இருக்கக்கூடாது? ஏனென்றால் இது வருவாயை பற்றியது, ஒரு ஒழுக்கமான சமூகம் பற்றியது அல்ல என்றும், எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள், எதிர்பார்க்கப்பட்ட விளக்கங்கள் என்றும், நமது தேசிய பொழுது போக்கு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. என குறிப்பிட்டுள்ளார்.