Skip to main content

இதற்கு ஏன் 380 கோடி? பிரசாந்த் கிஷோர் பற்றியும், திமுக பற்றியும் கடுமையாக விமர்சித்த பாஜகவின் காயத்ரி ரகுராம்!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

bjp

 


வரும் சட்டமன்றத் தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க சந்திக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். தி.மு.க விற்கு ஆலோசனைகளைக் கூற நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் டீம் பல்வேறு அதிரடி மாற்றங்களை திமுகவில் கொண்டு வரத் திட்டம் போட்டு வருவதாகச் சொல்கின்றனர். குறிப்பாக வரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கின்றனர்.   

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் பற்றியும், திமுக பற்றியும் பாஜக கட்சியைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், "பிரதமர் மோடிக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். ஏனென்றால் அவருக்கு மோடி தேவை. ஆனால் இன்று திமுக-விற்கு பி.கே தேவை, ஏனெனில் பி.கே-விற்கு ஒரு வாய்ப்பை ஏற்கனவே மோடி அளித்திருந்தார். உத்திகளை வகுக்கும் ஒரு தமிழரைத் திமுகவால் கண்டுபிடிக்க முடியவில்லையா? இன்று திமுக-விற்காக 380 கோடிக்குப் பணிபுரியும் பிரசாந்த் கிஷோர் முஸ்லிம்களைத் தூண்டிவிடுவதை உத்தியாக மேற்கொள்கிறார். அதோடு போலி ஐடிகள் மூலம் மீம்ஸ்கள் போட வைக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பிரசாந்த் கிஷோர் வாங்கிய 380 கோடிக்கு இப்படிச் செய்வது சிறந்ததா? என்றும், போலி ஐடி மூலம் மீம்ஸ் போட எதற்கு 380 கோடிகள் செலவிட வேண்டும். இது தான் உங்கள் உத்திகளா? தி.மு.க-விற்கு சொந்தமாக உத்திகளைப் பயன்படுத்தி திட்டங்கள் போடத் தெரியவில்லையா? மேலும், அந்த 380 கோடிகளை ஏன் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்குச் செலவிட முடியாது? ஏன் அதை இன்று வரை திமுக செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

http://onelink.to/nknapp


அதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் தோல்விகளை மறைக்க இந்து கோயில்கள் அனைத்தையும் ட்ரோல் செய்வார்கள். இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் எதிரான பேச்சுக்காக ஜோதிகாவுக்கு ஜிங் சக் அடிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்