Skip to main content

 திடீரென சாலையில் பொழிந்த பண மழை; போட்டிப்போட்டு கொண்டு அள்ளிய மக்கள்!

Published on 24/08/2024 | Edited on 24/08/2024
YouTuber who threw money on the road for bikes in Hyderabad

இணையத்தில் இளசுகள் லைக்கிறாகவும் வீவ்ஸுக்காகவும் நடனங்கள் ஆடுவது, பாடல் பாடுவதுடன் பைக் சாகசங்கள், வித்தியசமான வினோதமான கண்டெண்டுகளை தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். அப்படி வெளியிடும் வீடியோகள் வைரலாகி லாக்ஸில் லைக்குகளையும் குவித்து வருகிறது. அதே சமயம், சிலரது கண்டெண்ட் பல நேரங்களில் நெல்லை மீறியதாகவும், சிலரை முகம் சுழிக்க வைப்பதாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த யூட்டியூர் ஒருவர் லைக்குக்காக விநோத செயலை ஈடுபட்டுள்ளார். தெலுங்கான மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மகாதேவ். இவர், யூட்டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதனால் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அவ்வப்போது சில வினோதமான முறையில் கண்டெண்டுகளை தயார் செய்து வீடியோவாக வெளியிட்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது, யூட்டியூபர் மகாதேவ், சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,  லைக் மோகத்திலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கூக்கட்பள்ளி சாலையில் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு பணத்தைக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார். திடீரென சாலையில் பண மழையில் போல் ரூபாய் நோட்டுகள் பறக்க ஆரம்பித்ததால், அவ்வழியாகச் சென்றவர்கள் போட்டுப்போட்டுக் கொண்டு எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த வீடியோவை தனது யூட்டியூப் பக்கத்தில் பகிர்ந்த அவர், காற்றில் பறக்கவிட்ட பணம் சரியாக எவ்வளவு என்று கூறி நபருக்கு எனது அடுத்த வீடியோவில் பரிசு ஒன்று வழங்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் இது போன்று பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு வகையில் நடந்துகொள்ளும் இணையப் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்