உத்தரப்பிரதேசத்தில் எழு கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், இன்று மூன்றாவது கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நேற்று உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது கூட்டத்திலிருந்த இளைஞர்கள் திடீரென வேலை கேட்டு கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக இந்திய இராணுவத்திற்கு ஆட் சேர்ப்பைத் தொடங்குமாறு கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கோஷம் எழுப்பப்பட்டது குறித்து விசாரித்த ராஜ்நாத்சிங், கோஷமிட்டவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும் உங்கள் கவலைதான் எங்களின் கவலையும் எனத் தெரிவித்த ராஜ்நாத்சிங், கரோனா பரவல் காரணமாக இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பை தொடங்குவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் விளக்கமளித்தார். இதனைதொடந்து அனைவரையும் பாரத் மாதகி ஜெய் என கோஷமிடுமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் பாரத் மாதகி ஜெய் என கோஷம் எழுப்பினர். இதனையடுத்து ராஜ்நாத்சிங் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.