பெண்ணை கொன்ற வாலிபர் கைது
புனே அருகே பிம்பிரி சின்ச்வாட் நகரின் மிலிந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரோஷ் ஹமித் ஷேக் (37). அங்குள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 17 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளார். ஆத்திரமடைந்த பெரோஷ், அவரை கழுத்து நெரித்து, கொன்று தனது கடையின் கீழ் புதைத்துள்ளார். பெண்ணின் குடும்பத் தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில் இந்த பயங்கர சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து பெரோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.