Published on 18/06/2021 | Edited on 18/06/2021
![narendra modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/heDNtekFoGPQ-asbZF-AT5vV6fWFQiGYcUjtVyfqORs/1624001007/sites/default/files/inline-images/a%20%2847%29.jpg)
கரோனா இரண்டாவது அலையிலிருந்து இந்தியா தற்போது மீண்டுவருகிறது. இதற்கிடையே இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில், முன்களப்பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், 6 குறுகியகால பயிற்சி வகுப்புகளைப் பிரதமர் மோடி இன்று (18.06.2021) காணொளி வாயிலாக திறந்துவைத்தார்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டில் ஒரு லட்சம் முன்களப் பணியாளர்களைத் தயார்படுத்த நாம் பணியாற்றிவருகிறோம். ஜூன் 21ஆம் தேதியிலிருந்து, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்படுகிறதோ, அதேபோல் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்" என தெரிவித்தார்.