சணல் மூட்டையில் பெண் சடலம்
தென்கிழக்கு டெல்லி சங்கம் விகார் பகுதியில் உள்ள திறந்த வெற்றிடம் வழியாக சாலையில் பொதுமக்கள் சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சிலர் அங்கிருநத் சணல் பை மூட்டையிலிருந்து வருவதை கண்டு, உடனே இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், மூட்டையை பிரித்தனர். அப்போது அதில் அழுகிய நிலையில், ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. சடலத்தை ஆய்வு செய்தபோது, அது 20 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் என கண்டறிந்தனர். அப்பெண் கொலை செய்யப்பட்டு 20-25 நாட்கள் கடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிந்துள்ளனர்.