Published on 08/11/2019 | Edited on 08/11/2019
இந்தியாவிலுள்ள முக்கிய தலைவர்களுக்கு மத்திய அரசின் உயரியப் பாதுகாப்பான இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு இந்த உயரிய சிறப்பு பாதுகாப்பை கொடுத்து வருகிறது மத்திய அரசு.
அந்த வகையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இதற்கு பதிலாக, இசட் பிரிவு பாதுகாப்புக்கு இணையாக, பயிற்சி அளிக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் டெல்லியிலிருந்து தகவல் பரவியுள்ளது.