உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஆந்திராவில் மது கடைகளுக்கு 18 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள சம்பவம் குடிமகன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் விரைவில் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்கள். இந்நிலையில், தேர்தலை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டி அம்மாநில அரசு மதுக்கடைகளுக்கு தொடர்விடுமுறை அளித்து இன்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வரும் 12ம் தேதி முதல் 29ம் தேதி வரை 18 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை பலர் வரவேற்று இருந்தாலும், சிலர் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தொடர் விடுமுறை விட்டால் மது பிரியர்கள் எப்படி மதுக்குடிக்காமல் இருப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்த சர்ச்சை அம்மாநிலத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.