Skip to main content

டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த பகுதியில் ஆவி நடமாட்டமா??!!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018

டெல்லியில் பூட்டியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கியபடி 7 பெண்கள் உட்பட11 பேர் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் மாந்தீரீகம் மற்றும் அமானுஷ்யம்  போன்ற காரணங்களால் உருவான சம்பவமா?  என புரியாத புதிர்களாக இருந்துவரும் நிலையில் அந்த பகுதியில் இறந்தவர்களின் ஆவி நடமாடுவதாக வதந்திகள் பரவியுள்ளதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

death

 

 

 

அண்மையில் டெல்லியில் புகாரியில் ஒரு உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் கதவு பலமணிநேரம் பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தினர் பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அந்த தவகவலை அடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அங்கு 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 11 பேரின் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.

 

மேலும் இறந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டறிந்தனர். தூக்கில் தொங்கிய அந்த 11 பேரின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது எனவே போலீசாருக்கு இது  திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த சம்பவம் திட்டமிட்ட கொலையா? அல்லது உண்மையிலேயே தற்கொலையா? என போலீசார் விசாரித்து வந்தனர்.  

 

அப்படி இருந்த நிலையில் அந்த வீட்டில் நடந்தது அமானுஸ்ய மாந்த்ரீக கொலை என ஒரு பேச்சு அடிபட்டது. மேலும் அது உண்மையோ என சந்தேகிக்கும் வகையில் அந்த வீட்டின் வெளிப்புறம் அந்த அறையின் சுவற்றில் மொத்தம் 11 பைப் துளைகள் இருந்துள்ளது. அந்த துளையில் 4 துளைகள் நேராகவும் 7 துளைகள் வளைந்தும் இருந்தது. அந்தவீட்டில் இறந்த ஆண்கள் எண்ணிக்கை 4 இறந்த பெண்கள் எண்ணிக்கை 7. அடைக்கப்பட்ட வீட்டில் இறந்த ஆவிகள் வெளியேறவே இந்த துளைகள் அமைக்கப்பட்டதாக பேச்சு அடிபட  இப்படி புரியாத சந்தேகங்களை ஏற்படுத்திய இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு பெரும் பயத்தை கிளப்பியது.

 

 

 

அந்த பகுதியில் வசித்துவரும் ரியல் எஸ்டேட் டீலர் பவன் குமார் என்பவர் கூறுகையில், இந்த பகுதியில் இந்தசம்பவம் நடந்ததிலிருந்து யாரும் குடிவரவோ இடம் வாங்கவோ பயப்படுகின்றனர். ;எல்லோர் வீட்டிலும் சிறப்பு பூஜைகள் செய்துவருகின்றனர்., இங்கே இறந்த 11 பேரின் ஆவிகள் நடமாடுவதாக பலர் நம்புகிறார்கள் எனவும் கூறினார். மேலும் இறந்தவர்களின் மூத்த சகோதரன் தினேஷ் கூறுகையில் நான் இந்த வழக்கு விசாரணை முடியும்வரை இந்த வீட்டில்தான் தங்கப்போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்